உடுமலை:உடுமலையிலிருந்து கிராமப்பகுதிகளுக்கு, முழுமையாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்காததால், கிராம மக்கள் பாதித்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் துவக்கப்பட்டது.தினமும், திருப்பூர், பழநி, கோவை என 'மப்சல்' பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. உடுமலை கிளையிலிருந்து, கிராமப்பகுதிகளுக்கு, 47 வழித்தடங்களில் இயக்கப்பட்ட, பெரும்பாலான பஸ்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது.ஒரு சில வழித்தடங்களில், அதிகளவு பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்கள், முழுமையாக பஸ்கள் இயக்கப்படாததால், கிராமங்களுக்கு விவசாய பணிகளுக்குச்செல்லும் தொழிலாளர்கள், மில், தொழிற்சாலைகள் மட்டும் கடைகளுக்குச்செல்லும் தொழிலாளர்கள், மருத்துவ வசதிக்காக நகருக்கு வரும் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முழுமையாக கிராமங்களுக்கு பஸ்கள் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE