கோவை:சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.கொரோனா தடுப்பூசி போடும் பணி, நாடு முழுவதும் நடந்து வருகிறது. தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள், அதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை, 60 ஆயிரம் பேர் தடுப்பூசி போட விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக, தேர்தல் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறையினர், போலீசாருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, 350 வருவாய்த்துறை பணியாளர்களுக்கும், 650 போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அடுத்தபடியாக, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், பிற பணியாளர்களுக்கும் படிப்படியாக போடப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE