மாணவர்களுக்கு பாராட்டு விழாஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில், 2019-20 கல்வியாண்டில் பாரதியார் பல்கலை தேர்வில் பல்கலை அளவில், முதல் 10 இடங்களை வென்ற மாணவர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி செயலர் அஜீத்குமார் லால்மோகன் தலைமை வகித்தார். அவிநாசிலிங்கம் மனையியல் பல்கலை வேந்தர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கும், பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.வேலைவாய்ப்பு முகாம்ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேலைவாய்ப்பு துறை சார்பில், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. எஸ்.என்.எம்.வி., மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். முகாமில் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, பாராட்டு தெரிவித்தார். வேலைவாய்ப்பு துறை அதிகாரி மற்றும் பயிற்சியாளர் தினேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.கல்லுாரியில் நுகர்வோர் கிளப் துவக்கம்இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நுகர்வோர் கிளப் துவக்க விழா நடந்தது. கல்லுாரியின் பி.காம்., பி.ஏ., மற்றும் ஏ.எப்., துறை சார்பாக நடந்த துவக்க விழாவில், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி., முனைவர் மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், ''ஒவ்வொரு நுகர்வோரும் தங்களின் உரிமையை நன்கு அறிந்திருக்க வேண்டும். நாம் மனிதாபிமானத்தை வளர்த்து கொள்ள வேண்டும்,'' என்றார்.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.கலந்தாய்வுக்குஏற்பாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, வரும் 27ம் தேதி துவங்குகிறது. இக்கலந்தாய்வில் பங்கேற்போர், உரிய சமூக இடைவெளி பின்பற்றி அமரும் வகையில், இணைய தள வசதியுடன் ஆன்லைனில் கலந்தாய்வில் பங்கேற்க, மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், நான்கு கல்வி மாவட்டங்களில், மையங்கள் அமைக்க தகுதியான பள்ளிகளை, தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE