பொது செய்தி

தமிழ்நாடு

வேண்டும் மாதிரி வினாத்தாள்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. குறைக்கப்பட்ட சிலபஸ் அறிவித்து, பாடங்கள் முடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, வினாவங்கி விரைவில் விநியோகிக்க வேண்டும்; குறைக்கப்பட்ட சிலபஸ் அடிப்படையில், பொதுத்தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம்

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. குறைக்கப்பட்ட சிலபஸ் அறிவித்து, பாடங்கள் முடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, வினாவங்கி விரைவில் விநியோகிக்க வேண்டும்; குறைக்கப்பட்ட சிலபஸ் அடிப்படையில், பொதுத்தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பாடவாரியாக பயிற்சித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், இதை பள்ளிகளுக்கு விநியோகித்தால், மாணவர்கள் பலனடைவர் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.கலந்தாய்வு அறிவிப்பால் ஆசிரியர்கள் 'குஷி'கோவை: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு, சென்னையில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக, தொடக்க கல்வித்துறையிலும், தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. கல்வி மாவட்ட வாரியாக, பதவி உயர்வுக்கு தகுதியானோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சுகாதார விழிப்புணர்வு முகாம்பேரூர்: முள்ளாங்காடு பழங்குடியினர் கிராமம் மற்றும் தீத்திபாளையத்தில், கோவை பாரதி சமூக அறக்கட்டளை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில், பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை எடுத்துரைத்து, இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டன.கடன் தள்ளுபடி; 'கோப்மா' கோரிக்கைகோவை: கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க(கோப்மா) தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை, மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு விவசாய கடன், 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததை வரவேற்கிறோம். கொரோனா பாதிப்பில் இருந்து, மீள முடியாமல் தவிக்கும் குறுந்தொழில் முனைவோர்,தங்களது தொழிலுக்காக வங்கிகளில் வாங்கிய கடன்களையும், மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.கலப்படம்கண்டறிய பயிற்சிஉணவு பாதுகாப்புத்துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவம் அல்லா பணியாளர்களுக்கு, 'விரைவான பரிசோதனை மூலம் கலப்படம் கண்டறிந்து குறைத்தல்' பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும், 148 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 1,155 அரசு தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு வகுப்புவாரியாக விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இணையதளத்தில், தேர்வு செய்யப்பட்ட, 1,385 பேரின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.மாணவர்களுக்கு 'டேப்லெட்' எப்போதுகோவை: ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இவர்கள் வீட்டிலிருந்து படிக்கவும், தேர்வு எழுதும் வகையிலும், விரைவில் டேப்லெட் வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். தேர்தல் தேதி வெளியிடுவதற்கு முன்பே, இதற்கான டெண்டர் அறிவித்து, கொள்முதல் செய்யும் பணிகளை துவங்க வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X