கோவை:கோவை விமானநிலையத்தில் அடிக்கடி ரத்து செய்யப்படும் விமானங்களால், பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு, விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா பாதிப்புக்கு பின், கடந்த சில மாதங்களாக உள்ளூர் நகரங்களுக்கு இடையிலான விமான பயணம், இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.இச்சூழலில், கடந்த சில நாட்களாக கோவை விமானநிலையத்தில் இருந்து, மற்ற நகரங்களுக்கு வழங்கப்படும் விமான சேவை திடீர், திடீரென ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் தவிக்கின்றனர்.பயணிகள் கூறுகையில், 'கோ ஏர் நிறுவனம், ஒரு வாரம் தனது சேவையை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து, தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கோவையில் வழங்கி வந்த அனைத்து சேவைகளையும், பிப்., 19 முதல் மார்ச் 27ம் தேதி வரை, தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. வழக்கம் போல் விமானங்களை இயக்க வேண்டும்' என்றனர்.இதுபோன்று விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவது, தொழில்துறை மற்றும் இதர பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது ஸ்பைஸ் ஜெட் சென்னை, மும்பைக்கு விமான சேவை, மார்ச் 27ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, பயணிகள் வருகை குறைவாக உள்ளதே காரணம். கோ- ஏர் நிறுவனம் ஒரு வாரம் கழித்து தற்போது மீண்டும் சேவையை துவக்கியுள்ளது. அதுபோல் ஸ்பைஸ் ஜெட் சேவையும் விரைவில் துவங்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE