கோவை:அகில இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின், 2வது மாவட்ட மாநாடு நடந்தது.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கிராம கோவில்களுக்கு, நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரிய உதவித்தொகையை, இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும், மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். 60 வயதான பூஜாரிகளுக்கு, அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய தொகை, 3,000 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே, பூஜாரிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அனைத்து கோவில் பூஜாரிகளையும், நலவாரிய உறுப்பினராக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும்.அரசு வேலை வாய்ப்புகளில், கோவில் பூஜாரிகள் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். பேரவை அறங்காவலர் ஜோதிமணி, தீர்மானத்தை விளக்கி பேசினார். நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமத் சுவாமி கிருஷ்ணானந்த ராமானுஜாச்சாரியார் அருளுரை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE