விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட, கோல்டுவின்ஸ், துரைசாமி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:11) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியம் மற்றும் மாநகராட்சி மின் வாரிய ஒப்பந்ததாரரிடம், பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- சுரேஷ்,
கோல்டுவின்ஸ்.
ஆக்கிரமிப்பால் அவதிமாநகராட்சி, ஏழாவது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்தி நகர், கண்ணதாசன் வீதியில், சாலையோர ஆக்கிரமிப்புகளால், 20 அடி சாலை, 10 அடி சாலையாக மாறிவிட்டது; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- பொன்ராஜ், காந்தி நகர்.
தெருநாய் தொல்லை அதிகம்பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி, அய்யாசாமி கார்டனில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது; மக்கள் அச்சப்படுகின்றனர்.- சங்கர்,
போஸ்டல் காலனி.
சாலையை செப்பனிடணும்மத்தம்பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு - அக்சரம் பள்ளி செல்லும் ரோடு, சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும்.- மோகன், மத்தம்பாளையம்.
சாலையில் ஓடுது கழிவு நீர்புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தங்கராஜ், புலியகுளம்.
மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 61வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனி அருகே, சாஸ்திரி நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 14) சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.-பழனிசாமி,
ஒண்டிப்புதுார்.
மீண்டும் பிளாஸ்டிக்கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், உள்ள மளிகை கடைகள், பூ மார்க்கெட், பேக்கரிகள், இறைச்சிக்கடைகளில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.- பத்மநாபன், காந்திபுரம்.
குப்பை வாகனத்தால் தொல்லைமாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில், குப்பை அள்ளும் வாகனங்கள், சாலையை பாதியளவு அடைத்தபடி நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பணியை, காலை, 7:00 மணிக்குள் முடிக்க முயற்சிக்க வேண்டும்.- பெருமாள், பேரூர்.
குழாய் உடைப்புகுடிநீர் வீண்மாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, ராஜேஸ்வரி நகரில், பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- தேவதாஸ்,ராஜேஸ்வரி நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE