ஸ்டாலின் துவங்கி, கடைக்கோடி உடன்பிறப்பு வரை எப்படி தேர்தல் பணி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது, 'ஐ-பேக்' குழு தான்.
'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்ததை, அப்படியே செயல்படுத்துகின்றனரா என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு டீமை இறக்கி இருக்கிறது, ஐ-பேக். 'டீம்' ஆட்கள், தி.மு.க.,வினர் நடத்தும் ஓட்டல்களில் தங்கி, அவர்களுடைய கொடி கட்டாத காரில் வலம் வருகின்றனர்.
அவர்களுக்கும், 'லோக்கல்' உ.பி.,களுக்கும், அடிக்கடி முட்டல், மோதல் ஏற்படுவது, வேறு விஷயம்...
அந்தந்த தொகுதிக்கு ஏற்றபடி, ரகசியமாக தயாரித்து கொடுத்த திட்டம் எல்லாம், நம் தேர்தல் களத்திலும், சமூக ஊடகத்திலும் அம்பலம் ஆவது தான், ஸ்டாலினுக்கு வந்த, 'லேட்டஸ்ட்' தலைவலி.உதாரணமாக, ஆற்காடு தொகுதியில், பா.ம.க., பிரமுகரை துரைமுருகன் மூலம் வளைத்த செய்தி, நம் நாளிதழில் வெளியாகி இருந்தது. அவரை வளைத்தது, ரகசியம் கிடையாது.அதற்காக அவருடைய கடனை எல்லாம், 'செட்டில்' செய்த தகவல்கூட, எப்படி கசிந்தது என்பது தான் தளபதிக்கு அதிர்ச்சி. எம்.எல்.ஏ., யாகம் நடத்திய போட்டோ வெளியானதும் அதே ரகம்.
'ஐ-பேக்' திட்டங்கள் உடனுக்குடன், அ.தி.மு.க.,வின் ஆலோசனைக்குழுவை இயக்கும் சுனில் குழுவுக்கு பாசாகிறது என்பது, ஸ்டாலினுக்கு தெரியாது.தி.மு.க., யாரை வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்பது வரை, ரகசிய தகவல்கள் லபக்கப்படுகின்றன. 'கிராம சபை கூட்டத்தில், இன்று ஸ்டாலின் எந்த திசை நோக்கி அமர்வார் தெரியுமா' என்று கூட, 'மீம்ஸ்' போட்டு தெறிக்க விடுகிறது, அ.தி.மு.க.,வின், ஐ.டி., டீம்.
'டென்ஷன்' ஆன ஸ்டாலின், இது எப்படி நடக்கிறது என, 'ஐ-பேக்' நிர்வாகியை வறுத்திருக்கிறார். 'கறுப்பு ஆடு யார் என, கண்டுபிடித்து களை எடுங்கள்' என, 'அட்வைஸ்' செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE