ரயில்வே ஸ்டேஷனில் இனி கவலையில்லை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் இனி கவலையில்லை

Added : பிப் 21, 2021
Share
கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பான 'லிப்ட்', நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மற்றும், நான்காம் நடைமேடையில் 'லிப்ட்' ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடையில் அமைக்கப்பட்டு வந்த

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பான 'லிப்ட்', நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மற்றும், நான்காம் நடைமேடையில் 'லிப்ட்' ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடையில் அமைக்கப்பட்டு வந்த 'லிப்ட்', பணி முடிந்து நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் முன்னிலையில், 'லிப்ட்' பயன்பாட்டை துவக்கி வைத்தார். கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X