தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., உள்குத்து: அதிமுகவினர் கவலை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 21, 2021
Share
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்டது, கருங்கல்பாளையம். அங்கே, நத்தம் புறம்போக்கு நிலத்தில், 3,200 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குடியிருப்பவர்கள். பட்டா கேட்டு, 20 ஆண்டுகளாக போராடுகின்றனர்.அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கோபால், அவர்களுக்கு உதவ தீவிர முயற்சி செய்தார். 2018ல், நடந்த அரசு விழாவில், '3.200 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும்' என,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்டது, கருங்கல்பாளையம். அங்கே, நத்தம் புறம்போக்கு நிலத்தில், 3,200 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குடியிருப்பவர்கள். பட்டா கேட்டு, 20 ஆண்டுகளாக போராடுகின்றனர்.
அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கோபால், அவர்களுக்கு உதவ தீவிர முயற்சி செய்தார். 2018ல், நடந்த அரசு விழாவில், '3.200 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார். இதுவரை நடக்கவில்லை.ஏன் என்று விசாரித்தால், ஆளும் கட்சி பிரமுகரே குறுக்கே நிற்கிறார். பட்டா கிடைத்து விட்டால், செங்கோட்டையனுக்கும், கோபாலுக்கும் நல்ல பெயர் கிடைத்து விடுமே. அந்த கவலை, எம்.எல்.ஏ., தென்னரசுக்கு. தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதாக, சமீபத்தில் முதல்வர் அறிவித்தார். அந்த பட்டியலில் கருங்கல்பாளையத்தை சேர்க்க, கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என, 'லோக்கல்' அ.தி.மு.க.,வினர் முட்டி மோதி பார்த்தனர். எம்.எல்.ஏ.,உள்குத்து அரசியலால் கைகூடவில்லை. 'எந்த முகத்தோடு ஓட்டு கேட்டு போவது' என, அ.தி.மு.க.,வினர் கொதிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X