அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., கட்சியினர் மீது வழக்கு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட காங்., சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்., கட்சியினர் ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புகையிலை விற்றவர்கள் கைதுகோவை கடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, சிங்காநல்லுார், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள

டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட காங்., சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்., கட்சியினர் ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புகையிலை விற்றவர்கள் கைதுகோவை கடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, சிங்காநல்லுார், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். 89 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மது விற்ற எட்டு பேர் கைதுகோவை தண்ணீர் பந்தல், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், ரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக, மது விற்ற, எட்டு பேரை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.லாட்டரி விற்றவர்கள் கைதுஆர்.எஸ்.புரம், வெரைட்டி ஹால் ரோடு, கடை வீதிகளில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கேரள மாநிலத்தின், 44 லாட்டரிகள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X