கோவை:கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகத்தில், பஸ் ஏற வரும் பயணிகள் காலை மற்றும் மதிய வேளையில், உணவு சாப்பிடுவது வழக்கம். இப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடப்பதால், கடந்த ஒரு மாதமாக பஸ்கள் கணுவாய், தடாகம் ரோடு வழியாக செல்கின்றன.மேட்டுப்பாளையம் பஸ்கள் இப்போது இந்த பஸ் ஸ்டாண்டுக்கு வராமல், நேராக காந்திபுரம் செல்கின்றன. ஊட்டி கோத்தகிரி செல்லும் பஸ்கள் மட்டும் இங்கு வருகின்றன. அதனால் இங்குள்ள அம்மா உணவகத்துக்கு, சாப்பிட ஆட்கள் வருவது குறைந்துள்ளது. உணவக ஊழியர்கள் கூறுகையில், 'முன்பெல்லாம் தினமும் காலையில், 1000 இட்லிகள் மதியம், 150 சாப்பாடு விற்பனையாகும். பஸ்கள் வராததால் காலையில், 300 இட்லிகள், 40 அல்லது 50 சாப்பாடுகள் மட்டுமே விற்பனையாகின்றன. அதுவே சில நேரங்களில் விற்பனை ஆகாமல் வீணாகிறது. அதனால் அளவாக சமைத்து பரிமாறுகிறோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE