கோவை:கோவை, நவஇந்தியா - ஆவாரம்பாளையம் ரோட்டில், ஆம்னி பஸ் நிறுத்த, போலீசார் தடை விதித்துள்ளனர்.கோவை, நவஇந்தியா சிக்னலில் இருந்து, காந்திபுரம் ஜி.பி., சிக்னல் வரையிலான திட்டச்சாலையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. நவஇந்தியா சிக்னலில் இருந்து பி.பி.எல்., சிக்னல் வரை ரோட்டின் இருபுறத்திலும் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.இப்பகுதிகளில் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்களை நிறுத்த, போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அபராதமும் விதித்து வருகின்றனர்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''நவஇந்தியா - ஆவாரம்பாளையம் ரோட்டில், போக்குவரத்து போலீசார் நியமித்து, கண்காணிக்கிறோம். தற்போது பி.பி.எல்., சிக்னலில் இருந்து, காந்திபுரம் செல்லும் ரோட்டின் இருபுறத்திலும் வாகனங்கள் நிறுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE