கோவை:கோவை ஓட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மீண்டும் தெருவோர கடைகளில் மறுமுறை பயன்படுத்தப்படுவதை தடுக்க, அவற்றை சேகரித்து பயோ டீசலாக மாற்றப்படவுள்ளது.சமையல் எண்ணெயை, ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவதால், புற்றுநோய், இருதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் என, மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும், உணவகங்கள், அனைத்து வகை விடுதிகள், கல்லுாரி கேன்டீன், இனிப்பகங்கள், பாஸ்ட் புட் கடைகள் என அனைத்திலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதுமுண்டு. இதோ புது திட்டம்!இதை தவிர்க்க, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சி செய்யும், ரூப்கோ., திட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை உணவு பாதுகாப்புத்துறையின் கீழ், தற்போது இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கல்லுாரி மற்றும் பள்ளி கேன்டீன், விடுதிகள், தனியார் விடுதிகள், சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கேட்டரிங் அமைப்புகள், திருமண மண்டபங்கள் என அனைத்தும், இத்திட்டத்தின் கீழ் இணைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2,000 லிட்டர் தயார்!
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''கோவையில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்க, மூன்று அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். கேட்டரிங் அசோசியேஷன் மற்றும் நட்சத்திர உணவகங்களில் இதுவரை, 2,000 லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்து பயோடீசல் ஆக மாற்றப்படும்.இத்திட்டத்தின் கீழ், இணையதள பதிவு, எண்ணெய் சேகரிப்பு மற்றும் வினியோகம் விரைவில் துவங்கவுள்ளது.
உணவு சார்ந்த எண்ணெய் பயன்பாடு உடைய, அனைத்து தொழில் சார்ந்தவர்களும் இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளனர். இதன் வாயிலாக, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமயைல் எண்ணெயை, மீண்டும் பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும்,'' என்றார். உணவகங்கள், அனைத்து வகை விடுதிகள், கல்லுாரி கேன்டீன், இனிப்பகங்கள், பாஸ்ட் புட் கடைகள் என அனைத்திலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதுமுண்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE