புதுச்சேரி முதல்வர் ராஜினாமா; அடுத்தது என்ன ?

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (54+ 25)
Share
Advertisement
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமாக செய்தார். புதுச்சேரியில், 2016 சட்டசபை தேர்தலில், காங்., 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள், மாகி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஆட்சிக்கு
Puducherry, Rangaswamy, Narayanasamy

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமாக செய்தார்.புதுச்சேரியில், 2016 சட்டசபை தேர்தலில், காங்., 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள், மாகி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.காங்., - எம்.எல்.ஏ., தனவேலு கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில், அமைச்சர்கள் இருவர், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 15ல் இருந்து 10 ஆக குறைந்தது.காங்., அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டு, கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இன்று 22ம் தேதி, சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, முதல்வருக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 'கெடு' விதித்தார்.


மேலும் இருவர்

இந்நிலையில், ராஜ்பவன் தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வும் முதல்வரின் பார்லிமென்ட் செயலருமான லட்சுமி நாராயணன், நேற்று மதியம், 2:30 மணிக்கு, தன் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, சபாநாயகர் சிவக்கொழுந்திடம், அவரது இல்லத்திற்கு சென்று வழங்கினார்.அடுத்த அதிரடியாக, நேற்று மாலை, 4:00 மணியளவில், தட்டாஞ்சாவடி தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன், தன் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் சிவக்கொழுந்திடம் வழங்கினார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், ''எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், வெங்கடேசன் ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதை, முதல்வர் நாராயணசாமியிடம் தெரிவித்து விட்டேன். சட்ட ஆலோசகர்களிடம் விவாதித்து, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து, காங்., 9; தி.மு.க., 2; ஒரு சுயேச்சை உட்பட ஆளும் கட்சிக்கு, 12 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில், என்.ஆர்.காங்., 7; அ.தி.மு.க., 4; பா.ஜ., 3 உட்பட, 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

காங்., ஆட்சி முடிவுக்கு வந்ததால், அடுத்து அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம். அவரது கூட்டணிக்கு, 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதே நேரம், 'போதிய பலம் இருந்தாலும், ரங்கசாமி ஆட்சி அமைக்க விரும்ப மாட்டார்.

தற்போது, ஆட்சி அமைத்தால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும். எனவே ஆட்சி அமைப்பதை ரங்கசாமி தவிர்த்து விடுவார்' என, அக்கட்சியினர் கூறுகின்றனர். இதுபோன்ற சூழலில், புதுச்சேரி அரசின் நிர்வாகம், கவர்னர் வசம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (54+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
23-பிப்-202118:08:22 IST Report Abuse
ponssasi ஒரே இலக்கு தேர்தல் நேரத்தில் நாராயணசாமி முதல்வராக இருக்கக்கூடாது. காவல்துறையை வைத்து அத்துமீறலில் ஈடுபடுவார், குறிப்பாக அவர்மட்டுமேனும் வெல்ல போராடுவார். இனி அதிகாரம் தமிழிசை கையில், நாராயண சாமி சட்டமன்ற உறுப்பினராக வந்தாலே அது வரலாறுதான். ஏனெனில் அவரின் கடந்த காலம் அப்படி.
Rate this:
Cancel
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
22-பிப்-202121:50:46 IST Report Abuse
Sivasankar Ayyadurai அநாகரீகமான கருத்துக்கள் பதிவிட யாரு உரிமை கொடுத்தது.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
22-பிப்-202119:45:13 IST Report Abuse
PANDA PANDI பாஜகவின் தில்லாலங்கிடி திருவிளையாடலில் இதுவும் ஒன்று. சூழ்ச்சிகள் செய்து மக்களையும் அதிகாரத்தையும் கேவல படுத்தும் செயல். இதற்கு விரைவில் பலன் உண்டு. EVM விளையாட்டு வேற. சங்கிகள் ஜாக்கிரதை.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-பிப்-202121:49:52 IST Report Abuse
Chowkidar NandaIndiaஹா ஹா ஹா. அன்று என் டீ ஆர் வெளிநாடு போயிருந்தபோது தில்லாலங்கடி வேலை செய்து அவர் ஆட்சியை கலைத்து வீட்டு பிறகு அசிங்கப்பட்டு நின்ற சர்வாதியாரியின் சூட்சியை என்னவென்று சொல்லலாம். யாரும் இல்லாத அவையில் தெலுங்கானா மசோதா நிறைவேறியது என்று சொல்லி மக்களை சிரிக்க வைத்தது சூட்சியா, சாகசமா. அதே EVM மூலமாக தமிழகத்தில் 38 இடங்களில் ஜெயித்த மங்கிகள் இனியாவது திருந்தி ஜாக்கிரதையாக இருப்பது நாட்டிற்கு நல்லது. ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X