'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக அறிவித்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனினும், அவரது அரசியல் பிரவேசம், சிறிய அளவிலான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். கேரளாவில், பா.ஜ.,வை சவாலான போட்டியாளராக கருத மாட்டேன்.
சசி தரூர், லோக்சபா எம்.பி., -
காங்.,தீர்வு காண வேண்டும்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள், கட்டுப்பாடின்றி வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, விலை உயர்வு பிரச்னைக்கு, மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்
ஒழுங்கு படுத்த சட்டம்!
ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு, சமூக ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. குறிப்பிட்ட எல்லை இல்லாததால், அவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ராம் மாதவ், தேசிய பொதுச் செயலர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE