தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில், "வரும் 25ம் தேதி உக்கடத்தில், ஸ்மார்ட்சிட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 73வது பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் வேலுமணி பேசுகையில், "நடராஜனை போல, கிராமப்புறங்களில் இருந்து பல வீரர்கள் உருவாக வேண்டும். வரும், 25ம் தேதி உக்கடத்தில் ஸ்மார்ட் சிட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சென்னைக்கு மெரினா போல, கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ளது," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE