பொது செய்தி

தமிழ்நாடு

மனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை,: 'புதிய மனைப்பிரிவுகளில், அடிப்படை வசதிகளுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறைக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், முறையாக அடிப்படை வசதிகளை செய்யாமல் விடுவது வழக்கமாக உள்ளது. இதனால், அங்கு மனைகள் வாங்குவோருக்கு, முறையான அடிப்படை வசதிகள்

சென்னை,: 'புதிய மனைப்பிரிவுகளில், அடிப்படை வசதிகளுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறைக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், முறையாக அடிப்படை வசதிகளை செய்யாமல் விடுவது வழக்கமாக உள்ளது. இதனால், அங்கு மனைகள் வாங்குவோருக்கு, முறையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும் போதே, சாலை அமைப்பது, குடிநீர் வடிகால், மின் கம்பங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்த வசதிகள் முறையாக செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் திருப்தி அடையும் நிலையில் தான், அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதிலும், இப்புதிய விதியை சேர்க்க அரசு முடிவு செய்து உள்ளது.இதற்காக, 2017 தமிழ்நாடு அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறை விதிகளின், 10வது பிரிவில், புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில், உரிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே, வரன்முறைக்கு அனுமதி கிடைக்கும். இதற்கான திருத்த விதியை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X