தேனி: ''திராவிடத்திற்கு மாற்றுச்சிந்தனை வந்தால் தான் தமிழகம் உருப்படும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது:தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேறுவதால் எந்த சமுதாயத்திற்கும் பாதிப்பு இல்லை. எந்த முன்னுரிமை, கருணையும் வேண்டாம். எல்லோருக்கும் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அது போதும்.சிறப்பு சலுகை தேவையில்லை.தேவேந்திர குல வேளாளருக்கு எதிராக போராடுவது அச்சமுதாயத்தின் குரலாக இல்லை. அரசியல் துாண்டுதலாக கருதுகிறேன்.
இட ஒதுக்கீடு மட்டும் சமூக நீதி ஆக முடியாது. திராவிட கட்சிகளின் சிந்தனையில் பிழை உள்ளது. திராவிடர்களை ஏன் ஆதிதிராவிடர்களாக பிரித்தார்கள். 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இதை செய்ய வில்லை. பழைய புராணத்தை பாடுகிறார்கள். திராவிடத்திற்கு மாற்றுச் சிந்தனை வந்தால்தான் தமிழகம் உருப்படும். கோரிக்கை நிறைவேறிய பின்தான் சட்டசபை தேர்தல் குறித்து சிந்தனை செய்வோம், என்றார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் உடன் இருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE