திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, அலுவலர்கள் விஜயராஜா, லியோ ஆண்டனி, கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், காங்கயத்தில் பேக்கரி, உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் என, 22 கடைகளில் ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய, நான்கு கடைகளுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதி மற்றும் தேதி குறிப்பிடாமல் இருந்த உணவு பண்டங்கள் அழிக்கப்பட்டது. உரிமம், அனுமதி பெறாமல் இயங்கிய, எட்டு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை சேகரித்து வைத்து, அதனை அரசிடம் ஒப்படைத்தால், ஒரு லிட்டருக்கு ரூ.25 பெறலாம். இதற்கு மாவட்டம் வாரியாக ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE