முருகனின் வேலை, முருகன் கையில் எடுத்த நேரம், நல்ல நேரம் என, நம்புகிறது பாரதிய ஜனதா.
தமிழக பா.ஜ., தலைவர் முருகன், கையில் வேல் ஏந்தி யாத்திரை சென்றார். கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வீடியோவின் விளைவாக உருவானது, அந்த யாத்திரை. திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்), திருச்செந்துார் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்), திருவாவினன்குடி (எ) பழநி (திண்டுக்கல் மாவட்டம்), திருவேரகம் (எ) சுவாமிமலை (தஞ்சாவூர் மாவட்டம்), திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்), பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்) என, அறுபடை வீடுகளை தொட்டுச் செல்லும் விதமாக, வேல் யாத்திரை, 'ரூட்' போடப்பட்டது.
கொரோனா பரவலை காரணம் காட்டி, யாத்திரைக்கு அரசு தடை விதித்தது. என்றாலும், திருத்தணியில் கிளம்பி, திருச்செந்துாரில் வேல் யாத்திரை முடித்தார், எல்.முருகன். வழி நெடுக வேலை வழிபட்ட இந்துக்களால், ஆறு தொகுதிகளிலும், பா.ஜ.வுக்கு ஆதரவு பெருகி இருக்கும் என, மேலிடம் நம்புகிறது.
தங்களுக்கு, 60 தொகுதிகள் வேண்டும் என, அ.தி.மு.க.,விடம் கேட்டிருக்கிறது, பா.ஜ., தமிழக குழு. 'அந்த லிஸ்டில், அறுபடை வீடுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்; அது வேறு கட்சிக்கு சொந்தமானது என்று சொல்லி எங்களுக்கு ஒதுக்காமல் விட்டு விடாதீர்கள்' என, இப்போது துணை கோரிக்கை வைத்திருக்கிறது. இது, அ.தி.மு.க.,வை தர்ம சங்கடத்தில் தள்ளி இருக்கிறது.அதேசமயத்தில், ஆறு தொகுதி வேட்பாளர்களையும், பா.ஜ., முடிவு செய்துவிட்டது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE