சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சிவகங்கை: தமிழகத்தில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் (பிப்.,22) தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.தமிழகத்தில் 50,198 அங்கன்வாடி மையங்கள் மூலம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 574 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 49,499 முதன்மை மையங்களும், 4,940 குறு மையங்களும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அங்கன்வாடி

சிவகங்கை: தமிழகத்தில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் (பிப்.,22) தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழகத்தில் 50,198 அங்கன்வாடி மையங்கள் மூலம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 574 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 49,499 முதன்மை மையங்களும், 4,940 குறு மையங்களும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்குவதாக அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.பஞ்சப்படியுடன் ஊழியர்களுக்கு 10 லட்சம், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம்வழங்க வேண்டும்.

38 ஆண்டுகளாக பணிபுரிந்து பணி செய்து ஓய்வு பெறும் ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று (பிப்.,22) முதல் நடக்கவுள்ளது.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியமேரி தெரிவித்ததாவது: அரசுக்கு கோரிக்கை விடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்கவில்லை. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X