அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மை, உழைப்பே என் வெற்றியின் ரகசியம்: தமிழிசை

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: ''நேர்மையான, உண்மையான, அயராத உழைப்பு தான் சாதாரண பெண்,மருத்துவ மாணவி, அரசியல் கட்சி தலைவி, கவர்னர் என என்னை உயரத்தை அடைய செய்தது,'' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை பெருமிதம் கொண்டார்.விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லுாரியின் இரண்டாம் நாள் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கவர்னர் தமிழிசை பேசியதாவது:பல ஆயிரம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ''நேர்மையான, உண்மையான, அயராத உழைப்பு தான் சாதாரண பெண்,மருத்துவ மாணவி, அரசியல் கட்சி தலைவி, கவர்னர் என என்னை உயரத்தை அடைய செய்தது,'' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை பெருமிதம் கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லுாரியின் இரண்டாம் நாள் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கவர்னர் தமிழிசை பேசியதாவது:பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தனி ஒரு பெண்ணாக இருந்து ஆன்மிக தமிழை வளர்த்தவள் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்துார் என்பது ஆழ்வார்கள் பூமி, ஆண்டாளின் பூமி, ஆன்மிக பூமி. அங்கு பெண்கள் உயர்கல்வி பெறுவது மிகவும் சிறப்பு. கல்வி பணி என்பது சாதாரண பணி அல்ல. நல்ல அடித்தளம் என்ற அஸ்திவாரம் தான் வரும் காலத்தில் மாணவிகளாகிய உங்களின் எதிர்காலம் என்ற அரண்மனையை கட்டுவதற்கு பேருதவியாக இருக்கும். கல்வியை மட்டுமில்லாமல் கலாசாரத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கை தத்துவத்தையும் உணரும் மாணவிகளே, முழுமை பெற்ற பெண்களாக உருவாக முடியும், என்றார்.கல்லுாரி தாளாளர் பழனிசெல்வி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.சேர்மன் சங்கர், துணை சேர்மன் தங்கபிரபு, சிந்துஜா தங்க பிரபு, துணை தாளாளர் துர்காமீனலோசினி கமல்ராகவன், ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, டீன் சரவணன், கல்லுாரி முதல்வர்கள் மணிகண்டன், குமரேசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-202105:06:26 IST Report Abuse
Bhaskaran உண்மை எத்தனை தரக்குறைவாக விமர்சனங்கள் இவர்மேல் எதிர்க்கட்சிகள் சொன்னனாலும் அத்தனையையும் புறம் கண்டு சாதித்துள்ளார் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X