பல்லடம்:ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இதனால், அரிசியை வாங்கும் பொதுமக்கள் சிலர் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் கொட்டி செல்வது அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்கள் முன், பல்லடம் ஒன்றியம் இச்சிப்பட்டி, நகராட்சிக்கு உட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதிகளில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டது. தற்போது, பல்லடம் -உடுமலை ரோடு, மகாலட்சுமி நகர் பகுதிகளிலும் கொட்டப்பட்டுள்ளது. இலவச ரேஷன் அரிசி விற்பனையும் நடைபெற்று வரும் நிலையில், இவ்வாறு, கொட்டப்படுவதும் தொடர்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE