பொது செய்தி

தமிழ்நாடு

'பறிமுதல்' வாகனங்களில் பேட்டரி உள்ளிட்டவை களவு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், பேட்டரி உள்ளிட்டவை களவு போகின்றன.விபத்து, திருட்டு, மதுபாட்டில் கடத்தல், மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு உள்ளிட்டவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், பலவாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலும், போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகின்றன.ஒவ்வொரு போலீஸ்
 'பறிமுதல்' வாகனங்களில் பேட்டரி உள்ளிட்டவை களவு

திருப்பூர்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், பேட்டரி உள்ளிட்டவை களவு போகின்றன.விபத்து, திருட்டு, மதுபாட்டில் கடத்தல், மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு உள்ளிட்டவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், பலவாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலும், போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகின்றன.ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும், குறைந்தது, நுாறு வாகனங்கள் உள்ளன. இவை வெயில், மழையில் துருப்பிடித்து வீணாகின்றன.

பல புதிய வாகனங்கள் இதேபோல் நின்று வருகின்றன.வழக்கு முடிந்த நிலையிலும், உரிமையாளர்கள் உரிமை கோராத நிலையில் அவற்றை போலீசார் ஏலம் விடுவதில்லை. திருப்பூர் மாநகரில் உள்ள, 10 போலீஸ் ஸ்டேஷன்களில் மட்டும் குறைந்தது, 500க்கும் மேற்பட்ட டூவீலர்கள், ஸ்டேஷன் வளாகம், தனியார் இடத்தில் என, மாத கணக்கில் நிறுத்தி வைத்துள்ளனர்.
வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டூவீலர், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் காரணமாக, ஸ்டேஷன் போலீசாரின் வாகனம், அங்கு வரக்கூடிய மக்களின் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை தொடர்கிறது. பழைய ஆர்.டி.ஓ., ஆபீஸ் வளாகம் உள்ளிட்ட சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் மாயமாகியுள்ளன.எனவே, மாநகரில் ஸ்டேஷன் வளாகங்களில் தேங்கி கிடக்கும் வாகனங்களை முறையாக அப்புறப்படுத்தவும்,ஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X