திருப்பூரில் கார் மோதி ஒருவர் பலி: போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் கார் மோதி ஒருவர் பலி: போதை ஆசாமிகளுக்கு 'தர்ம அடி'

Added : பிப் 22, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில் கார் தறிகெட்டு ஓடி ஒருவர் இறந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். காரில், மதுபோதையில் இருந்த மூவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.திருப்பூர், குமார் நகர் பகுதியில் நடந்து சென்ற, ஐந்து பேர் மீதும், அவ்வழியாக சென்ற மற்றொரு கார் மீதும் மோதி விட்டு, ஒரு கார் நிற்காமல் சென்றது. டூவீலரில் சென்ற, கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர்
திருப்பூரில் கார் மோதி ஒருவர் பலி: போதை ஆசாமிகளுக்கு 'தர்ம அடி'

திருப்பூர்:திருப்பூரில் கார் தறிகெட்டு ஓடி ஒருவர் இறந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். காரில், மதுபோதையில் இருந்த மூவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.திருப்பூர், குமார் நகர் பகுதியில் நடந்து சென்ற, ஐந்து பேர் மீதும், அவ்வழியாக சென்ற மற்றொரு கார் மீதும் மோதி விட்டு, ஒரு கார் நிற்காமல் சென்றது. டூவீலரில் சென்ற, கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் யுவராஜ், 33 என்பவர் மீது கார் மோதியதில், அவர் பலியானார்.திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சிலர் தகவல் அளித்தனர். காரை பொதுமக்கள் விரட்டி சென்று, அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., சிக்னலில், வளைத்து பிடித்தனர். காரில், மதுபோதையில் இருந்த மூவரை பிடித்து 'தர்ம அடி' கொடுத்து, அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.'திடுக்' தகவல் அம்பலம்விபத்து ஏற்படுத்திய காரை, போலீசார் சோதனை செய்தனர். அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் மூவரும், திருப்பூர் மாவட்டம், உடுமலை மடத்துக்குளத்தை சேர்ந்த சூர்யா ஜெகதீஷ், 27, திருப்பூரை சேர்ந்த சூர்யா, 24, நீலகிரி, கூடலுாரை சேர்ந்த பாசில், 20 என்பது தெரியவந்தது.போலீசார் கூறியதாவது:விபத்தை ஏற்படுத்திய மூவர், கொள்ளை, திருட்டு என, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். சில நாட்களுக்கு முன்பு, சூர்யா ஜெகதீஷ், கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருக்கும்போது, சக கைதி ஒருவரின் பழக்கம் ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா ஜெகதீஷ் மற்றும் நண்பர்கள் இருவரும், அந்த கைதி அறிவுரைப்படி மதுக்கரையில் ஒரு நபரை கொலை செய்யும் நோக்கில் காரில் சென்றனர். மது அருந்தி விட்டு, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். மூவரிடமும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X