திருப்பூர்:ஜெ.,, பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு சார்பில், 2 ஆயிரத்து, 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கொடிகம்பத்தில் நேற்று மாலை நடந்தது.மாநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கோபால்சாமி தலைமை வகித்தார்; மாநில அமைப்பு செயலாளர் சிவசாமி, எம்.எல்.ஏ., விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் குமார் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று, 2 ஆயிரத்து, 73 பேருக்கு வேட்டி, சட்டை, சேலை, தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE