பொது செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி முதல்வரா, மந்திரவாதியா? திருப்பூரில் ஸ்டாலின் வியப்பு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:'பல லட்சம் கோடி முதலீடு; பல லட்சம் வேலைவாய்ப்பு கொண்டு வருவதாக கூறும் பழனிசாமி, முதல்வரா? மந்திரவாதியா?' என்று, திருப்பூரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, நேற்று, திருப்பூரில் நடந்தது. இதில், கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:முதல்வர் பழனிசாமி, எந்த வாக்குறுதியையும்
 பழனிசாமி முதல்வரா, மந்திரவாதியா? திருப்பூரில் ஸ்டாலின் வியப்பு

திருப்பூர்:'பல லட்சம் கோடி முதலீடு; பல லட்சம் வேலைவாய்ப்பு கொண்டு வருவதாக கூறும் பழனிசாமி, முதல்வரா? மந்திரவாதியா?' என்று, திருப்பூரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, நேற்று, திருப்பூரில் நடந்தது. இதில், கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:முதல்வர் பழனிசாமி, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர் எல்லா பகுதியிலும் சென்று, ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மாட்டார் என பேசுகிறார். பொதுமக்களிடம் பொய் பேசுவதில் முதல்வர் பழனிசாமிக்கு, 'டாக்டர்' பட்டம் தரலாம்.ஆட்சிக்கு வந்தவுடன் திட்டங்களை துவக்கி, ஆட்சிக் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நான்காண்டு காலம் எதையும் செய்யாமல் ஆட்சி முடியும்போது திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். பல லட்சம் கோடி முதலீடு, பல லட்சம் வேலைவாய்ப்பு கொண்டு வருவதாக பேசும் அவர் முதல்வரா, மந்திரவாதியா எனத் தெரியவில்லை.ஜெ., கொண்டு வந்த 'விஷன் 2020' என்ற திட்டம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. தற்போது, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்பு என்று பேசுகிறார் முதல்வர். ஊழலின் சரணாலயமாக தமிழகம் மாறிவிட்டது.மத்திய - மாநில அரசுகளின் தவறான நடவடிக்கை தொழில்துறையை முடக்கி விட்டது. தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் திட்டங்கள் நிறைவேற்றப்படும். கருணாநிதி எண்ணிய திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.இங்கு பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்படும். அக்குழுவுக்கு இதன் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே வேலையாக ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.அத்திக்கடவு - அவிநாசி திட்டம்தி.மு.க., கொண்டுவராதது ஏன்!ஸ்டாலின் பேசியதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், 1972ல் கொள்கை ரீதியாக கொண்டு வரப்பட்டது. 1990ல் தி.மு.க., ஆட்சியில், கையில் எடுத்த போது, ஆட்சி கலைக்கப்பட்டது. 1996ல் இதன் முதல் கட்டமாக கோவையில், குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2006ல், இரண்டாம் கட்ட பணி துவங்கியது.மத்திய அரசு ஒப்புதல் அனுப்பிய போது ஆட்சி மாறியது. அத்திக்கடவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2015ல் பொது நல வழக்கு போடப்பட்டது. தி.மு.க., பல போராட்டங்களை நடத்தியது, அதன் பின் வேறு வழியின்றி அ.தி.மு.க,, இதை நிறைவேற்றியுள்ளது. அதுவும் முழுமையாக இல்லை. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.எல்லாமே, 'செட்டப்'வழக்கமாக அனைத்து தொகுதிகளிலும் மனுக்கள் பெற்றது போல், இங்கும் மேடைக்கு வெளியே கட்சியினர் பொதுமக்களிடம், அச்சிட்டு வழங்கிய படிவத்தில் மனுக்கள் பெற்று ரசீது வழங்கினர். ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த 10 மனுக்களை எடுத்து, மனுதாரர் பெயரை அழைத்து பேச வைத்து அதற்கு தயாரித்து வைத்திருந்த பதில் உரையை ஸ்டாலின் வாசித்தார்.மனுக்கள் போட்ட பெட்டியைப் பூட்டி, அதன் சாவியை தொண்டர்களிடம் காட்டி விட்டு ஸ்டாலின் தனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டார். பின் பெட்டி 'சீல்' வைக்கப்பட்டது.இயல்பாக இல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டு குறிப்பிட்ட மனுக்களை மட்டும் எடுத்து. ஸ்டாலின் பேசினார், திரைப்படங்களில், வரும் 'செட்டப்' காட்சிகள் போன்று, நிகழ்ச்சி அரங்கேறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X