பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கட் அவுட் 'அலேக்'

Added : பிப் 22, 2021
Share
Advertisement
ஸ்டாலின் கட் அவுட் 'அலேக்'திருப்பூரில் நேற்று நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி துவங்கும்முன், டிஜிட்டல் திரைகளில், தி.மு.க.,வின் வரலாறு; திருப்பூரின் பிரச்னைகளை மையப்படுத்திய பட காட்சிகள் ஓடவிடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்தபின், 'செல்பி'க்காக வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் உருவபடத்தை, ஆண், பெண் தொண்டர்கள் அலேக்காக துாக்கிச்சென்றனர். இதைப்பார்த்த
   ஸ்டாலின் கட் அவுட் 'அலேக்'

ஸ்டாலின் கட் அவுட் 'அலேக்'திருப்பூரில் நேற்று நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி துவங்கும்முன், டிஜிட்டல் திரைகளில், தி.மு.க.,வின் வரலாறு; திருப்பூரின் பிரச்னைகளை மையப்படுத்திய பட காட்சிகள் ஓடவிடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்தபின், 'செல்பி'க்காக வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் உருவபடத்தை, ஆண், பெண் தொண்டர்கள் அலேக்காக துாக்கிச்சென்றனர். இதைப்பார்த்த 'ஐபேக்' டீம், ஓடிச்சென்று, பறிமுதல் செய்தது.'டோக்கன்' சிஸ்டம்நிகழ்ச்சியில் பங்கேற்க, 'டோக்கன்' கட்டாயப்படுத்தப்பட்டது. இதற்காக, சிறப்பு கவுன்டர்களும் செயல்பட்டன. தொண்டர்கள், மக்களை வரிசையில் நிற்கவைத்து, முகவரி; மொபைல் எண்; பகுதி பிரச்னைகளை கேட்டு எழுதி, டோக்கன் வழங்கினர்.குறை சொல்ல தெரியாமல் விழித்தவர்களிடம், நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என கூறி, குப்பை, சாக்கடை, குடிநீர் வரவில்லை என, தொண்டர்களே சுயமாக பிரச்னைகளை எழுதி, டோக்கன் கொடுத்து, அரங்கினுள் அனுப்பினர்.நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், '100 நாட்களுக்குள், உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இல்லையென்றால், இந்த டோக்கனை வைத்துக்கொண்டு, கோட்டைக்கு வரலாம்; முதல்வர் அறை வரை, வரலாம்,', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X