புதுடில்லி: தமிழகத்தில், 52.32 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள, நான்கு ரயில்வே திட்டங்களை, ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல், காணொலி காட்சி வாயிலாக, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் விபரம்:• அம்பத்துார், அரக்கோணம், எலாவூர், மாம்பலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், கங்கைகொண்டான், கடையநல்லுார், நாகர்கோவில் டவுன், வாஞ்சிமணியாச்சி என, 10 ரயில் நிலையங்களில் பயணியர் வசதிக்காக, 23.32 கோடி ரூபாய் செலவில், நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன• சென்னை எழும்பூர், மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர், ஈரோடு மற்றும் தஞ்சை ரயில் நிலையங்களில், நகரும் மின் ஏணிகளும், கோவை ஜங்ஷன் மற்றும் நாகர்கோவில் ஜங்ஷன் நிலையங்களில், 16.61 கோடி ரூபாய் செலவில், நகரும் மின் ஏணிகள் நிறுவப்பட்டுள்ளன
• திருமயிலை, பழவந்தாங்கல், பரங்கிமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை, திண்டுக்கல், கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஜங்ஷன், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில், 10.01 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன•காட்பாடி ரயில் நிலையத்தில், அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளதுஇந்த திட்டங்களை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், நேற்று துவக்கி வைத்தார்.டில்லியில் இருந்து, காணொலி வாயிலாக நடந்த இவ்விழாவில், சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொதுமேலாளர் ஜான்தாமஸ், மூத்த பொது மேலாளர், வி.ஜி.பூமா ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE