பொங்கலுார்:''தமிழகத்தில், 234 தொகுதிகளிலும், ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும்,'' என்று, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.திருப்பூர் மாவட்டம், கொடுவாயில், ஹிந்து மக்கள் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை விழா நடந்தது. இதில் பங்கேற்ற, அர்ஜுன் சம்பத் பேசியதாவது:தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு, உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். போலீஸ் தேர்வு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நடத்தப்பட வேண்டும்.வரும் 25ல் கோவை வரும் பிரதமர் மோடிக்கு ஆதரவையும் வரவேற்பையும் தெரிவிக்கிறோம். தமிழகத்திலும், மோடி ஆட்சி வர வேண்டும். வரும், 28-ல் சேலத்தில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில், 234 தொகுதிகளிலும் ஹிந்து ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்போம்.கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொள்கை முழக்க போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.கேரளாவை காக்க வேண்டும்கோவையில் அவர் கூறுகையில், ''கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவருகின்றனர். இந்நிலை மாற உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் ஒரு குடையில் அணிதிரள வேண்டும். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE