குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பெய்த கன மழையில், குன்னுார் மரப்பாலம் அருகே சாலையில் இரண்டு காட்டு மரங்களும், குன்னுார் கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை அருகே ஒரு மரமும் விழுந்தன. தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. குன்னுார் மற்றும் எடப்பள்ளி உட்பட பல பகுதிகளில், காலையில் கடும் மேக மூட்டமும் கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE