அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசியல் களம் காண்போம்' ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை:''இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, அரசியல் களம் காண்போம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார்.விருப்ப ஓய்வு பெற்றவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். இவர், அரசு பணியில் இருந்தபோது, தன் அலுவலகங்களில், 'லஞ்சம் தவிர்த்து; நெஞ்சம் நிமிர்த்து' என எழுதி வைத்ததுடன், நேர்மையாக பணியாற்றி, அனைவரது பாராட்டையும்
 'அரசியல் களம் காண்போம்' ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு

சென்னை:''இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, அரசியல் களம் காண்போம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
பேசினார்.

விருப்ப ஓய்வு பெற்றவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். இவர், அரசு பணியில் இருந்தபோது, தன் அலுவலகங்களில், 'லஞ்சம் தவிர்த்து; நெஞ்சம் நிமிர்த்து' என எழுதி வைத்ததுடன், நேர்மையாக பணியாற்றி, அனைவரது பாராட்டையும் பெற்றார்.இவர், தன் அரசியல்
நிலைப்பாட்டை, சென்னை, ஆதம்பாக்கத்தில், அவரது ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டம் வாயிலாக வெளிப்படுத்தினார்.

சகாயம் பேசியதாவது:என் 28 ஆண்டு கால அரசு பணியில், பல்வேறு சவால்கள், இன்னல்களை சந்தித்துள்ளேன். நேர்மையான அதிகாரிகளை, பல்வேறு கட்டங்களில் அவமானப்படுத்தும்
அரசியல்வாதிகள் அதிகம்.என் விருப்ப ஓய்வை கூட, சர்ச்சையாக்கி தான்அனுப்பினர்.நான், எந்த நடிகருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவும் இல்லை. அவர்களை, சந்தித்ததும் கிடையாது. ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வாருங்கள் என, இளைஞர்கள் அழைத்து கொண்டே
இருக்கின்றனர்.

அவர்களின், வேண்டுகோளை பரிசீலித்து, 'அரசியல் களம் காண்போம்' என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்.ஊழலற்ற நிர்வாகம் செய்வதே குறிக்கோளாக இருக்கும். இதை, தாய்மொழி தினத்தன்று, கூறுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால், இளைஞர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். காமராஜர், கக்கன் போல் நேர்மையாக, அண்ணாதுரை போல் எளிமையாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு சூழலிலும், ஊழல் செய்பவராகவோ, உறுதுணையாகவோ இருக்கக்கூடாது. ஜாதி, மதங்களை கடந்து செயலாற்ற வேண்டும். புதியதொரு தமிழகம் உருவாக்குவோம்.
அரசியலுக்கான, ஆயத்த பணிகள்அதிகம் உள்ளன. அதை, இணைந்து செய்வோம்.இவ்வாறு, சகாயம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
24-பிப்-202116:08:34 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நடக்கட்டும் நல்லது, இதுபோல புற்றீசல் போல புறப்பட்டு வாருங்கள், கிருத்துவ ஓட்டுக்களை நீங்கள் பிரியுங்கள், முசுலிம் ஓட்டுக்களை ஒவைசி பிரிக்கட்டும் மேலும் சாதி ஓட்டுக்களை எல்லோரும் ஆளுக்குஆள் பிரியுங்க்கள், மொத்தத்தில் தீம்காவை வீழ்த்த நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுங்கள், ஊடக ஆக்டோபஸ்களின் உதவியோடு தமிழக மக்களை சுருட்டிப்பிடித்திருக்கும் சூரிய கிரகணத்தை வீழ்த்துவோம். உடனடித் தேவை தீம்கா தோல்வி, அடுத்த தேவை கழக ஆட்சிகள் மற்றும் அதன் லட்டர்பேட் கட்சிகள் ஒழிப்பு, தமிழகத்தை 45 ஆண்டுளாக பிடித்துள்ள சாதி மத பேதத்தைத் துடைத்து எறிவோம், (லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்பது பணம் கையூட்டாக வாங்குவது மட்டும் அல்ல, தனது சாதி மதத்திற்கு ஆதரவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படாமை, நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் வரும்போது வேடிக்கை பார்க்காமை,அனைத்து குடிமக்களையும் ஒரே தராசில் பார்கும் மாட்சி, தவ வாழ்வு) உலகையே எடுத்துக்கொண்டாலும் கூட இன்றைய அளவில் அவற்றிற்கு தகுதியான தலைவர் ஒரே ஒருவர் மட்டுமே உள்ளார்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202111:30:10 IST Report Abuse
Malick Raja இதெல்லாம் போகாத ஊருக்கு வழிசொன்ன கதை .. தேறும் ஆனா தேறாது .. வளர்ச்சிக்கு ஒரே வழி திமுக கூட்டணிக்கு ஆதாரவு கொடுத்து அரசியல் நுழைவு பலம் பெற வாய்ப்பு .. திமுக கூட்டணியில் சேர்ந்து ஊழலை ஒழிக்க நேர்மையை கடைபிடிக்க உரியதை செய்யலாம் அதற்க்கு நிறைய பலன் .. இல்லையேல் விழலுக்கிரைத்த நீராகிவிடும் காலம் .. காலத்தின் குறுகியமை கருத்தில் கொண்டு அறிவார்ந்த செயல்பாடு ஒன்றே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் . சும்மா இளைஞர் படை என்றெல்லாம் காலம்தாழ்த்துவது ஒன்றும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும் .. அறிவார்த்தசெயல் ஒன்று அது திமுக கூட்டணியில் இணைந்து பலம் பெறுதல் ஒன்றே முதல் இலக்காக இருப்பின் உண்டு வாழ்வு ..இல்லையேல் தாழ்வு .. சகாயம் அவர்கள் முனைப்புடன் செயல்பட வாழ்த்துக்கள் ..திமுக கூட்டணி சகாயம் அவர்களுக்கு அடித்தளம் அமைக்க உதவும் என்பதில் ஐயம் இல்லை
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-202117:54:23 IST Report Abuse
Yaro Oruvan என்னடா இது மதுரைக்கு வந்த சோதன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X