பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா படைகளை 'வாபஸ்' வாங்க முடிவு

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லடாக்; இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சில், குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது.அதே நேரத்தில், டெப்சாங், டெம்சோக் பகுதிகள் தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா - சீனா ராணுவத்தின் படைப் பிரிவு

லடாக்; இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சில், குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது.



latest tamil news


அதே நேரத்தில், டெப்சாங், டெம்சோக் பகுதிகள் தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா - சீனா ராணுவத்தின் படைப் பிரிவு தளபதிகள் இடையேயான, 10வது சுற்று பேச்சு, நேற்று முன்தினம் நடந்தது. நேற்று அதிகாலை, 2:00 மணி வரையில், தொடர்ந்து, 16 மணி நேரம் பேச்சு நடந்தது.

ஏற்கனவே நடந்த, ஒன்பது சுற்று பேச்சுகளின் அடிப்படையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற இடங்களில் இருந்தும், படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.அதில், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.


latest tamil news


டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி கொள்வதில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.படைப் பிரிவு தளபதிகள் இடையேயான பேச்சில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, ராணுவ உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-பிப்-202117:44:02 IST Report Abuse
J.V. Iyer அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே திரும்ப போகிறார்கள். அவர்கள் கை ஓங்கி இருந்தால் நம்மை விரட்டி இருப்பார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்தது விட்டது. போரிட போயிருந்தால் காங்கிரஸ் ஆட்சி இழந்ததை மீட்டிருக்கலாம்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-பிப்-202113:09:33 IST Report Abuse
Sridhar பேசாம ராவுல் காந்தியை முன் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தலாமே? அவர்தான் நம் ராணுவ அதிகாரிகளைவிட 'வீர' மாணவராயிற்றே? அவர் போடுற ஒரே போட்டில், சீனாக்காரன் துண்டக்காணோம் துணியக்காணோம்ன்னு ஓடிடமாட்டான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X