பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்டு சந்திரயான் - 3 திட்டம் இஸ்ரோ சிவன் தகவல்

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:''நிலவை ஆய்வு செய்யும் 'சந்திரயான் - 3' திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் சிவன்,தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டம் உள்ளிட்டவை, கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு
 அடுத்த ஆண்டு சந்திரயான் - 3 திட்டம்  இஸ்ரோ சிவன் தகவல்

புதுடில்லி:''நிலவை ஆய்வு செய்யும் 'சந்திரயான் - 3' திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் சிவன்,தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டம் உள்ளிட்டவை, கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு முந்தைய நிலை படிப்படியாக திரும்பி வருவதால், விண்வெளி திட்டங்களை துரிதப்படுத்தும் பணிகளில், இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று கூறியதாவது:சந்திரயான் - 3 திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்; அதற்கான பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டமும், சந்திரயான் - 2 திட்டம் போன்றது தான். எனினும், சந்திரயான் - 3 திட்டத்திற்கு, தனியாக விண்கலம் எதுவும் இருக்காது. சந்திரயான் - 2 திட்டத்தின்போது செலுத்தப்பட்ட விண்கலம், இதற்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
23-பிப்-202116:11:14 IST Report Abuse
Elango நீங்க திறமைசாலி தான் ஒத்துகிரோம் நாடு இருக்கும் சூழலில் இது தேவயையா கொரான்ன வால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர் ஆனால் கோடியை தாண்டும் உங்க திட்டத்தை தள்ளி வைத்து அதில் ஆகும் செலவை மக்களுக்கு குடுங்க என்று மோடியிடம் நீங்க கூறலாமே...இப்ப இதுக்கு அவசரமே இல்ல சிவன் சார்... போய் படுங்க சார்
Rate this:
Cancel
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
22-பிப்-202119:51:59 IST Report Abuse
M.RAGHU RAMAN இந்தியாவில் ஏழைகள் அதிகம், அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு செலவழிக்கலாம். மக்களின் பணத்தை வானவெளியில் புகையாய் தயவு செய்து வீணாக்காதீர்கள்.
Rate this:
Cancel
Er Jai kalam - Madurai,இந்தியா
22-பிப்-202110:16:40 IST Report Abuse
Er Jai kalam அடுத்த ஆண்டு சந்திரயான் - 3 திட்டம் இஸ்ரோ சிவன் தகவல் Dear Sir., I like to vision very well to nation. Today Research Need to Lift up poor economic society people cost of living . High cost Petrol ,gas,Bus Far,tollgate,etc for all requirement. So Spent the Research fund to people welfare Grow to nation. அடுத்த ஆண்டு சந்திரயான் - 3 திட்டம் இன்று உலகம் இந்தியா -1 திட்டம் thanking you சார் thanking you சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X