பொது செய்தி

இந்தியா

பதஞ்சலியின் கொரோனா மருந்து உலக சுகாதார அமைப்பு மறுப்பு

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள 'கொரோனில்' மருந்தை விற்பனை செய்ய இந்திய அரசும் உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கியுள்ளதாக யோகா குரு ராம்தேவ் கூறியதை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களை தயாரித்து

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள 'கொரோனில்' மருந்தை விற்பனை செய்ய இந்திய அரசும் உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கியுள்ளதாக யோகா குரு ராம்தேவ் கூறியதை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் ராம்தேவ் கூறுகையில்'பதஞ்சலி சார்பில் கொரோனாவுக்கு எதிராகக் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனில் மருந்துக்கு மத்திய அரசும் உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கிவிட்டன' என்றார்.இதற்கிடையே கொரோனாவுக்கு எதிராக பாரம்பரிய மருந்து எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் 'கொரோனாவுக்கு எதிராக எந்த பாரம்பரிய மருந்தையும் நாங்கள் பரிசோதிக்கவில்லை. ஆய்வு செய்யவில்லை. விற்பனை செய்வதற்கு அனுமதியும் வழங்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-202123:28:39 IST Report Abuse
தமிழவேல் இதுபோல உலக லெவல்ல பொய் சொன்னவனை, (அதுவும் சுகாதார சம்பந்தமாய்) என்ன செய்யலாம் ?
Rate this:
Cancel
Saravanan - Cairo,எகிப்து
22-பிப்-202116:02:40 IST Report Abuse
Saravanan ஏமாற்றுப்பேர்வழி, இவன் சார்ந்த கும்பலும் ஏமாற்றுப்பேர்வழியே
Rate this:
Cancel
Saravanan - Cairo,எகிப்து
22-பிப்-202116:00:15 IST Report Abuse
Saravanan He is a Fraud, and the group he belongs to also fraud
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X