சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பூசியை, நேற்று செலுத்திக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 29 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. பலி எண்ணிக்கை, 909 ஆக உள்ளது.இந்நிலையில், நாட்டில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை, மக்களுக்கு போடும் பணி, நேற்று துவங்கியது.ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, 'பைசர் மற்றும் பயோ என் டெக்' தடுப்பூசி மருந்து, மக்களுக்கு போடப்படுகிறது. இந்த தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, பிரதமர் ஸ்காட் மோரிசன், முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
முதற்கட்டத்தில், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.வரும் மார்ச்சுக்குள், 40 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட, ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE