சென்னை; 'அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்; அ.தி.மு.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும்' என,த.மா.கா., தலைவர்வாசன் கூறியுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவு:அ.தி.மு.க., வெற்றி கூட்டணியாக இருக்கிறது; 10 ஆண்டு கால ஆட்சியில், முதல்வரும், துணை முதல்வரும் சாமானியர்களாக, சாதாரண மனிதர்களாக மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களை, தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்.அ.தி.மு.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை நோக்கம்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, முதல்வர்இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டியிருப்பதன் வாயிலாக, விவசாயம் செழிக்கும்.'விவசாயிகள் முன்னேறுவர்; குடிநீர் தேவை பூர்த்தியாகும்' என, தெரிவித்துள்ளார்.25ல் விருப்ப மனுவாசன் அறிக்கை:வரும் சட்டசபை தேர்தலில், த.மா.கா., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனுவை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்தில், வரும், 25, 26, 27ல் அளிக்க வேண்டும்.விருப்பமனு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு, 5,000 ரூபாய்; மகளிர் மற்றும் தனி தொகுதிகளுக்கு, 2,500 ரூபாயும் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE