அரசியல் செய்தி

தமிழ்நாடு

24ல் தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு பேச்சு உடன்பாடு எட்டாவிட்டால் 3வது அணி?

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான, அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சு, வரும், ௨௪ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் துவங்குகிறது.இந்தப் பேச்சுவார்த்தையில், தி.மு.க., சார்பில், பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலர் அ.ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.காங்., சார்பில், பொதுச்செயலர் உம்மன்சாண்டி, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ்

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான, அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சு, வரும், ௨௪ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் துவங்குகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில், தி.மு.க., சார்பில், பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலர் அ.ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.காங்., சார்பில், பொதுச்செயலர் உம்மன்சாண்டி, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்., தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பேசுகின்றனர்.20 தொகுதிகள்?கடந்த, ௨௦௧௬ சட்டசபை தேர்தலில், குறைந்த ஓட்டில், காங்கிரஸ் தோற்ற தொகுதிகள்; கோஷ்டி தலைவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், அணிகளின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்ற அடிப்படையில், ௪௦ தொகுதிகளை கேட்க, காங்., தரப்பு திட்டமிட்டுள்ளது.

ஆனால், ௨௦ தொகுதிகளுக்கு மேல், ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க, தி.மு.க., தயாராக இல்லை.இரு தரப்பிலும், தொகுதி பங்கீடு பேச்சில் சுமூக முடிவு எட்டப்பட்டால், தொகுதிகளை அடையாளம் காணும் வகையில், அடுத்தகட்ட பணிகளில் இருதரப்பினரும் ஈடுபடுவர்.மார்ச், ௧ம் தேதி, ஸ்டாலின் பிறந்த நாள். அன்று, காங்., - எம்.பி., ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். வரும், ௨௭, ௨௮ம் தேதிகளில், தென் மாவட்டங்களில், ராகுல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால், ஸ்டாலினை ராகுல் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார்.தொகுதி பங்கீட்டில் அதிருப்தி நிலவினால், 'டுவிட்டரில்' வாழ்த்து தெரிவித்து விட்டு, ஸ்டாலினை சந்திக்காமல், ராகுல் டில்லி திரும்புவார் என, கூறப்படுகிறது.

மேலும், தொகுதி பங்கீட்டில், தி.மு.க., இறுதி வரை பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில் இருந்து, காங்., வெளியேறி, நடிகர் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் அல்லது தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.இதை கருத்தில் கொண்டே, ௨௩௪ தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, வரும், 25ம் தேதி வரை, காங்., விருப்ப மனு பெறுகிறது என்கிறது, சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
22-பிப்-202109:27:59 IST Report Abuse
Arachi துரைமுருகன் போன்ற முத்த தலைவர்கள் திமுகவிலிருந்து ஒதுங்கிவிட்டால் திமுகவுக்கு நல்லது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-202105:02:21 IST Report Abuse
Bhaskaran Etti uthaithaalum kaangiress veru pakkam pogamaataargal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X