அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்கள் ஓட்டு வேண்டுமா? தி.மு.க.,வை விளாசிய பா.ஜ.,

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சேலம்: ''தி.மு.க.,வுக்கு ஹிந்து என்றால் அசிங்கம், ஹிந்து மதம் அசிங்கம், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், ஹிந்து ஓட்டு மட்டும் வேண்டும். வாட் இஸ் திஸ் பிரதர்,'' என பா.ஜ., தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசினார்.சேலத்தில் நேற்று நடந்த பா.ஜ., இளைஞரணி மாநாட்டில் அவர் பேசியதாவது:பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நமக்காக எல்லையை பாதுகாத்து வருகிறார்.

சேலம்: ''தி.மு.க.,வுக்கு ஹிந்து என்றால் அசிங்கம், ஹிந்து மதம் அசிங்கம், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், ஹிந்து ஓட்டு மட்டும் வேண்டும். வாட் இஸ் திஸ் பிரதர்,'' என பா.ஜ., தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசினார்.

சேலத்தில் நேற்று நடந்த பா.ஜ., இளைஞரணி மாநாட்டில் அவர் பேசியதாவது:பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நமக்காக எல்லையை பாதுகாத்து வருகிறார். சீனா கூட நம்மை கண்டு பயப்படுகிறது. இதற்காக, இளைஞர்கள் சார்பில் அவருக்கு நன்றி.தமிழகத்தில் முருகன் தலைமையிலான வேல் யாத்திரைக்கு பின், பா.ஜ., அதிக பலத்துடன் செயல்பட்டு வருகிறது.பா.ஜ.,வில் உள்ளவர்கள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, வந்தவர்கள். ஆனால், தி.மு.க.,வோ கட்சி நடத்துவதே ஒரு குடும்பத்துக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தான்.சித்தர்கள், புலவர்கள், வாழ்ந்த நாடு இது.

ஆனால், தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான அரசியலை நடத்தி வருகிறது. கோவில்களை மட்டுமல்ல, நிலங்களை அபகரித்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் சந்தர்ப்பவாதியாக மாறி, தான் ஒரு ஹிந்துவாக காட்டிக்கொள்ளும் கட்சி.தி.மு.க., வுக்கு ஹிந்து என்றால் அசிங்கம். ஹிந்து மதம் அசிங்கம், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், ஹிந்து ஓட்டு மட்டும் வேண்டும், வாட் இஸ் திஸ் பிரதர்?தமிழகத்தில், தி.மு.க., எங்கள் பா.ஜ.,வை, ஹிந்தி கட்சியாக சித்தரிக்கிறது. ஹிந்தி பின்புலம் இல்லாமல், கர்நாடகாவில் பிறந்த நான், தேசிய இளைஞரணி தலைவராக உள்ளேன். இங்குள்ள வானதி சீனிவாசன், அகில இந்திய மகளிரணி தலைவியாக உள்ளார்.

பா.ஜ., பிராந்திய மொழிகளுக்கான கட்சி. பிராந்திய மொழிகள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால், ஹிந்துத்வம் என்ற கொள்கை உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.தமிழர்கள் எங்கெல்லாம் சென்றனரோ, அவர்கள் வெற்றியும், சாதனையும் படைத்துள்ளனர். தமிழகம் முன்னேற்றம் பாதையில் செல்ல வேண்டும் என்றால், ஊழல் இல்லாத அரசு வேண்டும்.தேசிய ஜனநாயக கூட்டணி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும். புதிய தமிழகம் படைப்போம் என உறுதியேற்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X