திருப்பூர்: ''பல லட்சம் கோடி முதலீடு; பல லட்சம் வேலைவாய்ப்பு கொண்டு வருவதாக கூறும் இ.பி.எஸ்., முதல்வரா, மந்திரவாதியா?,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, நேற்று திருப்பூரில் நடந்தது.இதில், கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:முதல்வர் இ.பி.எஸ்., எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர் எல்லா பகுதியிலும் சென்று, ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மாட்டார் என பேசுகிறார்.பொதுமக்களிடம்பொய் பேசுவதில் அவருக்கு, 'டாக்டர்' பட்டம் தரலாம்.ஆட்சிக்கு வந்தவுடன் திட்டங்களை துவக்கி, ஆட்சிக் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நான்காண்டு காலம் எதையும் செய்யாமல், ஆட்சி முடியும் போது திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டுகிறார்.
பல லட்சம் கோடி முதலீடு, பல லட்சம் வேலைவாய்ப்பு கொண்டு வருவதாக பேசும் அவர் முதல்வரா, மந்திரவாதியா எனத் தெரியவில்லை.ஜெ., கொண்டு வந்த, 'விஷன் 2020' என்ற திட்டம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. தற்போது, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்பு என்று பேசுகிறார் முதல்வர். ஊழலின் சரணாலயமாக தமிழகம் மாறிவிட்டது.மத்திய - மாநில அரசுகளின் தவறான நடவடிக்கை, தொழில் துறையை முடக்கி விட்டது. தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் திட்டங்கள் நிறைவேற்றப்படும். கருணாநிதி எண்ணிய திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்தி.மு.க., கொண்டு வராதது ஏன்?ஸ்டாலின் பேசியதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கருணாநிதி ஆட்சிக் காலத்தில், 1972ல் கொள்கை ரீதியாக கொண்டு வரப்பட்டது. 1990ல் தி.மு.க., ஆட்சியில், கையில் எடுத்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டது. 1996ல், இதன் முதல் கட்டமாக கோவையில், குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2006ல், இரண்டாம் கட்ட பணி துவங்கியது.மத்திய அரசு ஒப்புதல் அனுப்பிய போது, ஆட்சி மாறியது. அத்திக்கடவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2015ல், பொதுநல வழக்கு போடப்பட்டது. தி.மு.க., பல போரட்டங்களை நடத்தியது. அதன்பின், வேறு வழியின்றி, அ.தி.மு.க., அரசு இதை நிறைவேற்றியுள்ளது. அதுவும் முழுமையாக இல்லை. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE