சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி மீது தாக்குதல்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சேத்துப்பட்டு: நிலத்தகராறில் கர்ப்பிணியை தாக்கி கருவை கலைத்த, பஞ்., தலைவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த புதுக்கோட்டை பஞ்., தலைவர் ஏழுமலை, 45; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தவமணி, 35 என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.இரண்டு நாட்களுக்கு முன், தவமணியின் மனைவி உமாசங்கரி, 30, ஏழுமலையின் குடும்ப உறுப்பினர்கள் இடையே வாய்த்தகராறு

சேத்துப்பட்டு: நிலத்தகராறில் கர்ப்பிணியை தாக்கி கருவை கலைத்த, பஞ்., தலைவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த புதுக்கோட்டை பஞ்., தலைவர் ஏழுமலை, 45; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தவமணி, 35 என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.இரண்டு நாட்களுக்கு முன், தவமணியின் மனைவி உமாசங்கரி, 30, ஏழுமலையின் குடும்ப உறுப்பினர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.அங்கு வந்த ஏழுமலை, கர்ப்பிணியான உமாசங்கரியை காலால் எட்டி உதைத்தார். படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டதாக தெரிவித்தனர். பெரணமல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X