வருமான வரித்துறை சோதனை: வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமான வரித்துறை சோதனை: வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

Added : பிப் 22, 2021
Share
புதுடில்லி: ஸ்ரீநகரில் உள்ள பிரபல மருத்துவமனையை நிர்வகிக்கும் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், அதன் நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இயங்கும் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர், சமீபத்தில் சோதனை

புதுடில்லி: ஸ்ரீநகரில் உள்ள பிரபல மருத்துவமனையை நிர்வகிக்கும் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், அதன் நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இயங்கும் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர், சமீபத்தில் சோதனை நடத்தினர்.அதன்படி, நான்கு குடியிருப்பு பகுதிகள் உட்பட, ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, அந்த குழுமத்தின் நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த சோதனையில், 82.75 லட்சம் ரூபாய் ரொக்கமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 35.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும், வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட வங்கி லாக்கருக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.அந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், 2013 - 2014 நிதியாண்டில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணப் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.எனினும், சம்மந்தப்பட்ட அந்த குழுமத்தின் பெயரை, வருமான வரித் துறையினர் வெளியிடவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X