பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ரோஷ காளைகள்; அடக்கிய காளையர்! கோவை ஜல்லிக்கட்டில் 'மல்லுக்கட்டு'

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ், சிறந்த வீரராக தேர்வாகி, பரிசாக காரை தட்டிச் சென்றார்.கோவை மாவட்ட நிர்வாகத்துடன் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து, நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு செட்டிப்பாளையம் அருகே நேற்று நடந்தது. அமைச்சர் வேலுமணி வீரர்களின் உறுதிமொழி ஏற்புக்கு பின், ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். முதலில் வந்த கோவில்

கோவை:கோவையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ், சிறந்த வீரராக தேர்வாகி, பரிசாக காரை தட்டிச் சென்றார்.கோவை மாவட்ட நிர்வாகத்துடன் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து, நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு செட்டிப்பாளையம் அருகே நேற்று நடந்தது. அமைச்சர் வேலுமணி வீரர்களின் உறுதிமொழி ஏற்புக்கு பின், ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். முதலில் வந்த கோவில் மாட்டை, வீரர்கள் பிடிக்கவில்லை.தொடர்ந்து வாடிவாசலை விட்டு வெளியே துள்ளி குதித்து வந்த காளைகளை, வீரர்கள் போட்டி, போட்டு அடக்கினர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, வீரர்கள் குழு மாற்றப்பட்டது.காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிமுறை மீறிய வீரர்கள் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 956 காளைகள் களம் கண்டன. 800 வீரர்கள் காளைகளை அடக்க, களம் இறங்கினர்.மாலை, 6:45 மணிக்கு முடிந்த ஜல்லிக்கட்டில், 15 காளைகளை அடக்கிய புதுக்கோட்டையை சேர்ந்த, சந்தோஷ் முதலிடத்தை பிடித்து, காரை பரிசாக தட்டிச் சென்றார். மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக், திண்டுக்கல், நத்தத்தை சேர்ந்த கார்த்திக் அடுத்த இரு இடங்களை பிடித்தனர். பைக், ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டன.அமைச்சரின்காளைக்கு கார்சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசாக காரையும், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரின் காளை பைக்கையும், அன்பு என்பவரின் காளை ஸ்கூட்டரையும் தட்டிச் சென்றன. மேலும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தலா இரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. வீரர்களுக்கு, ரொக்கப்பரிசு, சேர், அண்டா வழங்கப்பட்டன.காளைகள் அடக்க முற்பட்ட 104 வீரர்கள் காயம்பல காளைகள் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் அடக்க முற்பட்ட வீரர்களை, கால்பந்து போல உதைத்து தள்ளி, சீறிப்பாய்ந்து சென்றன. இதில், 104 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில், 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆறு பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறு அளவில் காளைகளும் காயமடைந்தன; கால்நடை மருத்துவக் குழுவினர். சிகிச்சை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X