மும்பை : மும்பையில் தன் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.மும்பையில் சுமேத் ஜாதவ் என்பவர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த 21 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
சுமேத் ஜாதவுக்கு குடிப் பழக்கம் இருப்பது சமீபத்தில் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து அந்த பெண் ஒதுங்கினார். எனினும் சுமேத் அவரை தொந்தரவு செய்து வந்தார்.பிப். 19ம் தேதி அந்த பெண்ணை சுமேத் யாதவ் துரத்திச் சென்றார். ரயில் நிலையத்தில் தன்னை சுமேத் துரத்தி வருவதை தன் தாயிடம் அந்த பெண் கூறியுள்ளார்.அங்கு வந்த சுமேத் யாதவ் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். அந்த பெண் அதை ஏற்க மறுத்தார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுமேத் பெண்ணை இழுத்து ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். நடை மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய அந்த இளம்பெண் படுகாயமடைந்தார். சுமேத் யாதவ் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE