பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான பயணியருக்கு புதிய வழிகாட்டு விதிமுறைகள்

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பிரிட்டன், தென்னாப்ரிக்கா, பிரேசிலில் கொரோனா உருமாற்றம் காரணமாக, சர்வதேச விமான பயணியருக்கு, புதிய வழிகாட்டு விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச விமானங்களில் வரும் பயணியர், டில்லி விமான நிலைய, 'ஆன்லைன்' முகவரியில், கொரோனா பாதிப்பு இல்லை என, சான்றை பதிவேற்ற வேண்டும்.பரிசோதனையை, 72

புதுடில்லி: பிரிட்டன், தென்னாப்ரிக்கா, பிரேசிலில் கொரோனா உருமாற்றம் காரணமாக, சர்வதேச விமான பயணியருக்கு, புதிய வழிகாட்டு விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.



latest tamil news


மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச விமானங்களில் வரும் பயணியர், டில்லி விமான நிலைய, 'ஆன்லைன்' முகவரியில், கொரோனா பாதிப்பு இல்லை என, சான்றை பதிவேற்ற வேண்டும்.பரிசோதனையை, 72 மணி நேரத்திற்குமுன் நடத்தியிருக்க வேண்டும்.பிரிட்டன், தென்னாப்ரிக்கா மற்றும் பிரேசில் வழியாக இயக்கப்படும் விமானங்களில்,அந்நாட்டின் பயணியரை தனியாக அமர்த்த வேண்டும்.


latest tamil news


இந்நாடுகளின் பயணியருக்கு பரிசோதனை கட்டாயம் என்பதால், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் முன், அவர்கள் அதற்கு உட்பட வேண்டும்.பாதிப்பு இல்லை என, முடிவுகள் வந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா உறுதியானால், சிகிச்சை அளிக்கப்படும்.இன்று நள்ளிரவு முதல் அமலாகும் புதிய விதிமுறைகள், அடுத்த அறிவிப்பு வரை தொடரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan arumugam - london,யுனைடெட் கிங்டம்
22-பிப்-202119:37:46 IST Report Abuse
magan arumugam மிகவும் கொடுமையான நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம் என்று மாறுமோ இந்த நிலை முருகா மேலும் கட்டு பாடுகளை தளர்த்த வேண்டும்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-202114:45:03 IST Report Abuse
தமிழவேல் என்னது, பாதிப்பு இல்லை என, முடிவுகள் வந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா 🤔. பாதிப்பு உள்ளவர்களுக்கே 14 நாள் போதுமே..
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
22-பிப்-202112:46:56 IST Report Abuse
sridhar மற்ற நாடுகளில் முதலில் இவைகளை சரியாக செய்வதில்லை இதற்கும் நம்மவர்களே காரணம் பயணிக்கும் ஓரிரண்டு பயணிகள் பயணிக்கும் தினத்தில் கொரோனா இருக்கிறது என்று வந்தால் அவர்கள் பயணிக்க கூடாது அனால் அவர்கள் அதை மாற்றி பயணித்து விடுகிறார்கள் இதனால் மற்ற பயணிகளும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் இவங்க திருந்தவே மாட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X