தமிழ்நாடு

பெட்டிக்குள்ளே பெட்டி வைத்து மனு வாங்கும் ஸ்டாலின்: கரூரில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கரூர்: ''பெட்டிக்குளே, பெட்டி வைத்து, ஸ்டாலின் மனு வாங்கி வருகிறார்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.கரூர் லைட்ஹவுஸ் கார்னரில், மகாத்மா காந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு விழா நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். சிலைகளை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதால், கரூரில் அடிக்கடி

கரூர்: ''பெட்டிக்குளே, பெட்டி வைத்து, ஸ்டாலின் மனு வாங்கி வருகிறார்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


கரூர் லைட்ஹவுஸ் கார்னரில், மகாத்மா காந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு விழா நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். சிலைகளை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதால், கரூரில் அடிக்கடி எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பச்சோந்தி கூட, சிறிது நேரம் கழிச்சு தான் கலர் மாறும். அதைவிட வேகமாக, செந்தில்பாலாஜி, கட்சிகள் மாறி வருகிறார். ஐந்தாண்டு காலத்திற்குள், இரண்டு சின்னத்தில் போட்டியிட்டு சாதனை செய்துள்ளார். இப்போ, தி.மு.க.,விற்கு போய், அங்கு இருப்பவர்களை முடித்து கட்டி விட்டு, இவர் மாவட்ட பொறுப்பாளராக ஆகிவிட்டார். அரவக்குறிச்சி தேர்தலில், மூன்று சென்ட் நிலம் உட்பட பொய்யான வாக்குறுதி கொடுத்து, வெற்றி பெற்றார். மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்று, செந்தில்பாலாஜியிடம் கேட்க வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய் தவிர வேறு எதுவும் பேசுவது கிடையாது. நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது, எதையும் செய்வது கிடையாது. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், ஊர் ஊராய் சென்று வாங்கிய மனுக்கள் என்னாச்சு. இப்பவும் பெட்ஷீட் விரித்து கொண்டு, மீண்டும் என்ன பிரச்னை என, கேட்க தொடங்கி விட்டார். அங்கு கூட, மனுக்கள் பெற பெட்டிக்குள்ளேயே, பெட்டி என்று இரண்டு பெட்டி இருக்கிறது. அதில், பொதுமக்கள் கோரிக்கை போட ஒரு பெட்டியும், யார், யாருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற விபரம், இன்னொரு பெட்டியில் இருக்கும். அதிலும் நம்பர் மாறி போயி, முதல் நம்பர் கேள்விக்கு, எட்டாம் நம்பர் கேள்விக்குரிய பதிலை தப்பு, தப்பாக சொல்கிறார்.

தி.மு.க.,வில், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர். மற்றவர்கள் பிரசாரம் செய்தால், கட்சி தன்னை விட்டு போய்விடும் என்ற பயம் உள்ளது. அ.தி.மு.க., அரசு மீது, பொய்யான ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். அமைச்சராக துரைமுருகன் இருந்த போது, 220 டெண்டர்கள் ஒரு ஆளுக்கு மட்டும் அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று, ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் வழக்கு விசாரணைக்கு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது கூட, அவருக்கு தெரியவில்லை. அதில், தி.மு.க.,வின், 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். மின்துறை அமைச்சர் தங்கமணி, நகர செயலாளர்கள் பாண்டியன், நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X