அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்களது ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும்: ஸ்டாலின் உறுதி

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
ஈரோடு: இன்னும் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழும் எனக்கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், அது திமுக.,வின் தனிப்பட்ட ஆட்சியாக இல்லாமல், மக்களின் ஆட்சியாக இருக்கும் என உறுதியளித்தார்.ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக தலைவர் ஸ்டாலின், ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரசார நிகழ்ச்சியில் பேசியதாவது: எனது அரசின் முதல் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளை போர்கால அடிப்படையில்
DMK, Stalin, MKStalin, திமுக, ஸ்டாலின், ஆட்சி, மக்களாட்சி

ஈரோடு: இன்னும் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழும் எனக்கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், அது திமுக.,வின் தனிப்பட்ட ஆட்சியாக இல்லாமல், மக்களின் ஆட்சியாக இருக்கும் என உறுதியளித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக தலைவர் ஸ்டாலின், ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரசார நிகழ்ச்சியில் பேசியதாவது: எனது அரசின் முதல் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளை போர்கால அடிப்படையில் தீர்ப்பதே முதல் பணி. மூன்றே மாதத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். அது திமுக.,வின் தனிப்பட்ட ஆட்சியாக இல்லாமல், மக்களின் ஆட்சியாக இருக்கும். நாடு முழுவதும் பெரும் பிரச்னையாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் சங்கிலி தொடர் போல பேருந்து, காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கூடும்.


latest tamil news


2014ல் பெட்ரோல், டீசலுக்கான மத்திய, மாநில அரசுகளின் வரி, தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி, 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துகொண்டு இந்த விலையேற்றத்திற்கு காங்., காரணம் என கூறுகிறது. கருணாநிதி ஆட்சியில் மாநில அரசின் பெட்ரோல் மீதான வரியை 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் முதல்வர் பழனிசாமி 34 சதவீதமாக உயர்த்தினார். இதுதான் வெற்றி நடைபோடும் தமிழகமா?

அசாமில் உள்ள பா.ஜ., அரசு பெட்ரோல், டீசல் விலையில் 5 ரூபாயை குறைத்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள பழனிசாமி, ஏன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை?. உங்கள் தேர்தல் அறிக்கையில் இதையும் சேர்த்துவிடுங்கள் முதல்வரே. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmathivanan - Trichy ,இந்தியா
23-பிப்-202109:14:22 IST Report Abuse
kmathivanan avar sollum makkal Udayanidhi , Sabareesan , Kani Moli , manaivi , inanivi , துணைவி , தயாநிதி, கலாநிதி , மகள்கள் , மருமகன்கள், இன்ப நிதி , இனிய நிதி , அந்த நிதி, இந்த நிதி இவர்கள் தான், மக்களே உஷார்
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
23-பிப்-202100:45:14 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman சரியாக சொன்னார். கலைஞர் குடும்ப மக்களின் ஆட்சியாக இருக்கும்.
Rate this:
Cancel
22-பிப்-202123:00:07 IST Report Abuse
சம்பத் குமார் 1). கலைஞர் அய்யாவை தண்ணி இல்லா காட்டிற்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிவங்க நம் தமிழக மக்கள்.2). அதுவும் எத்தனை வருடங்களுக்கு மூன்று தேர்தலுக்கு. இதற்கும் கலைஞர் அவர்கள் விடாமல் முரசொலியில் தினமும் உடன்பிறப்பே என்று கட்டுரை வெளியிட்டும் ஒன்னும் நடக்கல.3). இடையில் ரயிஜினி சார் புண்ணியத்தில் ஒருமுறை முழு மெஜாரிட்டி.4). அப்புறம் ஜெயலலிதா அம்மா இருக்கும்போது காங்கிரஸ் உடன் மைனாரிட்டி கவர்மென்ட். இதுதான் DMKவின் வெற்றி தோல்விகள் AIADMK ஆரம்பிக்கப்பட்ட பிறகு. பொறகு DMK பெரிசா ஜெயித்தமாதிரி ஒன்னும் கண்ணுக்கு தெரியவில்லை.5).DMK பொது செயலாளர் துரைமுருகன் அவரே சொல்லிவிட்டார் AIADMK ஒடும் குதிரை DMK நொண்டி குதிரை என்று. அவருக்கே தெரிந்துவிட்டது இந்த தேர்தலில் DMK ஜெயிக்க போவது இல்லை என்று.6). மக்கள் விரும்பியிருந்தால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் DMKவை ஜெயிக்க வைத்து இருப்பார்கள்.7). இந்தமுறை திரும்ப‌ எடப்பாடியாருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம். இதுவரை எடப்பாடியார் நான்கு ஆண்டுகளாக நல்ல முறையில் நடந்து வந்து உள்ளார். நல்ல ஆட்சியை குடுத்து உள்ளார். எனவே மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் தருவோம்.8). தங்களை பொறுத்த வரையில் already நீங்க துணை முதல்வராக இருந்துள்ளீர்கள். பெரிய இடத்து பிள்ளை. இந்தமாதிரி CM போன்ற பதவிகளுக்கு ஆசைப்படாமல் பெரிதாக PM அதாவது பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X