புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த காங்., எம்பி., ராகுல், ‛மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்வதாக,' விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன. இது தொடர்பாக காங்., தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையே, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது.

இதுகுறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: உங்கள் காரை ஒரு பெட்ரோல் பம்பில் மீண்டும் எரிபொருள் செலுத்தும் போது, வேகமாக உயரும் மீட்டரைப் பார்க்கும்போது, கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் ஒரு பெரிய வேலையை மோடி அரசு செய்து வருகிறது!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE