மியான்மர் ராணுவ அத்துமீறல்; ஐநா தலைவர் கண்டனம்

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நேபிடாவ்: மியான்மர் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாங்கன் உள்ளிட்ட முக்கியத் நகரங்களில் ஆங் சன் சூ காய் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்புகளை
Myanmar, UN_Chief, Demands, Immediate Halt, Repression, ஐநா, தலைவர், மியான்வர், ராணுவம், அத்துமீறல், கண்டனம்

நேபிடாவ்: மியான்மர் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாங்கன் உள்ளிட்ட முக்கியத் நகரங்களில் ஆங் சன் சூ காய் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் பலர் ராணுவத்தின் அராஜகத்தை கண்டித்து தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் விதிமுறை மீறலுக்காக பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


இதனைத்தொடர்ந்து தற்போது ஐநா தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் ராணுவ அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ஜனநாயகவாதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அவர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் மியான்மர் நாட்டுடனான வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கக் கோரியுள்ளனர். இது தவிர ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விரைவில் இது குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை கூட்டி மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-202112:48:52 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) ஐக்கியமில்லா நாட்டு டலீவரே நீர் ஒரு செல்லா காசு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-பிப்-202120:55:52 IST Report Abuse
Ramesh Sargam இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மியான்மருக்கு இந்த நேரத்தில் உதவவேண்டும். இல்லையென்றால் cunning சீனா அங்கு டென்ட் அடித்துவிடும். ஏற்கனவே பாக்கிஸ்தான், ஸ்ரீ இலங்கை போன்ற நாடுகளில் ஊடுருவி இருக்கிறது இந்த cunning சீனா, அது மியான்மரில் நடக்கக்கூடாது.
Rate this:
Cancel
22-பிப்-202118:45:56 IST Report Abuse
சம்பத் குமார் 1). UN( ஜக்கிய நாடுகள் சபை) மற்றும் WHO(உலக சுகாதார அமைப்பு) தற்பொழுது இருக்கும் சூழலில் பார்த்தால் திறம்பட நடப்பது போல தெரியவில்லை. அதனிடம் உத்வேகம் வெகு குறைவாக காணப்படுகிறது.2). இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதுடன் அதை கண்டித்து தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும்.3).மியான்மார் நமக்கு அண்டை தேசம். நாம் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஜனநாயகம் செழிக்க நாம் உறுதுணையாக இருப்போம். அதேசமயம் மியான்மார் இராணுவமும் நமது நண்பர்கள் என்பதை மறந்துவிட கூடாது. நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X